...

9 views

புதிய விடியல்
அதிகமில்லை ஆசைகள்
ஆயிரம் விடியல் கண்டாலும்
இன்று வந்த அதிகாலை புதியது
ஈகையோடு வரவேற்கின்றேன்
உவகையோடு தொடங்குகின்றேன்
ஊக்கம் சிறிதும் குறையவில்லை
எண்ணிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றும்
ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை எதையும் செய்ய முடியும்
ஐயப்பாடுகள் மனதில் இல்லை தைரியம் உண்டு
ஒற்றுமையை வலியுறுத்தி
ஓங்கி வளர்ந்து
ஔடதம் தவிர்த்து ஆரோக்கியம் காப்போம்


© KaviSnehidan