...

3 views

வண்ணமில்லா சித்திரம்
#WritcoPoemPrompt61

சிலர் வாழ்வியல் முறைகள் முணு முணுப்பு கூடியும் கூட்டமாய் குடும்பங்களின்
உறுதியில் வண்ணம் பெற்றும் வண்ணமில்லா சித்திரங்கள் உயிர் பெரும்
நாம் எப்போதும் ஒரு அற்புதமான ஓவியம் போன்ற வாழ்க்கையை திட்டமிடுகிறோம்,
ஆனால் சில நேரங்களில், நாம் எப்படியோ ஒரு மூடுபனி நிலப்பரப்பை வரைகிறோம்.
முட்டாள்கள் பாறையைப் போல அமைதியாக இருப்பார்கள், குறை சொல்வதை நிறுத்த மாட்டார்கள்.
ஆனால் ஆர்வமுள்ளவர் எழுந்து நின்று அழகான வடிவத்தை வரைவார்.
சிக்கல் நிரம்பி நிற்கும் வாழ்க்கையில் வண்ணங்கள் பரப்பி வரும் உறவுகளை மனநிலை பொறுத்து பொறுமை யாக செல்லும் உறவு நம்மை உணர்ந்து உயர்த்தும் பொறுமையின்றி குற்றம் கண்டுபிடிக்கும் உறவுகள் விரிசல் விட்டே விலகி முன்னேற்றத்திற்கு தடை கல் நாம் வரையும் சித்திரம் நிறைவு பெறுவதும் புதைவதும் முழுவதும் அழகிய நிறங்கள் பிடியில் நாம் அதற்கு ஏற்றார் போல் கொடுக்கும் மனதின் அபரிவிதமான ஆர்ப்பரிப்பில்
அமையும்

© Ash(ஈசன் )