...

11 views

காதலும் கடந்து போகும்
காய்ந்து போன
சருகுகளில்
தேடுகிறேன்
உன் நினைவை...

பல நேரம் நாம்
இந்த சருகுகளின்
சாட்சியாய் தான்
பல கதைகள்
பேசியிருக்கிறோம்...

நம் காதலை
புரிந்து கொண்டதும்
பகிர்ந்து கொண்டதும்
இவைகளின்
பார்வையில் தான்....

உனக்கு தான்
அவைகள்
மறந்து போயின
நம் காதலும்
என் நினைவும்...

இந்த சருகுகள்
தான் நம்
காதலின் சாட்சியம்...

இப்போது என்னைப்
பார்த்து நகைக்கிறது
இவைகள்...

இன்னும் எத்தனை
பேரடி காதலால்
ஏமாறப்போவது என...


அது எனைப்
பார்த்து நகைத்து
சொல்கிறது....

உன் கண்ணீரை
சேமித்து வை...

அது எங்கு வேண்டுமோ
அங்கு செலவு செய்....

வீணாய் ஏமாற்றும்
வஞ்சகருக்காய்
வீணாக்காதே என.....

எத்தனை பட்டும்
நமக்கு தான்
புரிவதில்லை....

காதலும் ஒரு
நாள் கடந்து
போகும் என்று....