
6 views
நினைவுகளின் சந்திப்பு
எங்கோ ஒருநாள் நம்
பார்வைகள் சந்தித்துக் கொள்ளும்
நெஞ்சங்கள் படபடக்கும்
வார்த்தைகளும் மவுனமாகும்
நம் இருவர் நினைவும் ஒரே
நினைவாக நினைவுகளை சிந்திக்கும்
அந்நினைவுகள் நாம் தொலைத்த
வாழ்வின் பயணங்களாகவேயிருக்கும்
கரம் கோர்த்த இரவின் பயணங்கள்
இருவிரல் ரேகையில் பதிந்த
மூன்றாம் விரல் ரேகைகள்
தூக்கம் தொலைத்த இரவு உரையாடல்கள்
உரையாடல் தொடர்ந்திடச்
சொல்லிய பொய்களில் ஒர் சிரிப்பும்
உண்மைகளின் அழுகையும்
நம் பயணத்தின் உயிர்களே
இத்தனை நினைவுகளும்
கடந்து போகுமே அந்த ஒற்றை நிமிடத்தில்
காண்கின்ற கணப்பொழுதின்
கண்ணீர்கள் வலிகளின் இனிமையே
விடியல்கள் இல்லா இரவின்
பயணங்கள் முடிவதென்றால்
மரணத்தில் முடிவு விடியல்கள்
காத்திருக்கும் காதலின் பதில்களே
கண்ணீரின் வலிகள்.....
வானத்து பட்டாம்பூச்சி
பார்வைகள் சந்தித்துக் கொள்ளும்
நெஞ்சங்கள் படபடக்கும்
வார்த்தைகளும் மவுனமாகும்
நம் இருவர் நினைவும் ஒரே
நினைவாக நினைவுகளை சிந்திக்கும்
அந்நினைவுகள் நாம் தொலைத்த
வாழ்வின் பயணங்களாகவேயிருக்கும்
கரம் கோர்த்த இரவின் பயணங்கள்
இருவிரல் ரேகையில் பதிந்த
மூன்றாம் விரல் ரேகைகள்
தூக்கம் தொலைத்த இரவு உரையாடல்கள்
உரையாடல் தொடர்ந்திடச்
சொல்லிய பொய்களில் ஒர் சிரிப்பும்
உண்மைகளின் அழுகையும்
நம் பயணத்தின் உயிர்களே
இத்தனை நினைவுகளும்
கடந்து போகுமே அந்த ஒற்றை நிமிடத்தில்
காண்கின்ற கணப்பொழுதின்
கண்ணீர்கள் வலிகளின் இனிமையே
விடியல்கள் இல்லா இரவின்
பயணங்கள் முடிவதென்றால்
மரணத்தில் முடிவு விடியல்கள்
காத்திருக்கும் காதலின் பதில்களே
கண்ணீரின் வலிகள்.....
வானத்து பட்டாம்பூச்சி
Related Stories
10 Likes
1
Comments
10 Likes
1
Comments