...

9 views

பெண் என்னும் தேவதை
*பெண் என்னும் தேவதை*

பிறப்பு முதல் இறப்பு வரை
யாமிருக்கும் காலம் யாவும்
பெண்ணின்றி இயங்காதே..
உலகெனக்கு சுழலாதே..

நான் கொண்ட காதல் அதை
ஏற்றிடவும் பெண் வேண்டும்..
என் காதல் மறுத்தென்னை
ஒதிக்கிடவும் பெண் வேண்டு்ம்..

தாயென்றும்
தமக்கையென்றும்..
தாரமென்றும்
தோழியென்றும்..
என் வாழ்வில்
இருக்கின்றாள்..
மகளென்ற மகத்துவமாய்
கரம் அணைக்க பிறக்கின்றாள்.

முயன்று நானும் தோற்றிடவே
தேற்றிடவும் அவள் வருவாள்..
மறுமுயற்சி எடுத்து நானும்
வென்றிடவும் உதவிடுவாள்..

பிறந்திருந்து இறக்கும் வரை
வழியெங்கும் பெண்ணிருப்பாள்..
நீ காணும் யாவிலுமே
அவளும்தான் வீற்றிருப்பாள்..

இரயில் பயண
சிறுதூரத்தில்
எதிரில் இருப்பாள்
சிலமணிநேர காதலி..

நான் ரசிப்பதை
அறிந்தும் அறியாத
பாவனையில்
அனுமதித்திடு்ம்
அவளும் காதலிதானே..

முறைத்தென்னை முடக்கிட
அவளுக்கொரு நொடியே
போதுமானதாக இருக்கும்..

தனக்கான பாதுகாப்பு
வளையத்தை சீண்டாத
என்னை விட்டுவைத்தாள்
அந்த இரயில் காதலி..

மறுபுரம் வாழ்க்கை வெறுத்து
கோவில் சென்றமர்ந்தால்
அங்கொருத்தி ஏதோ
அந்த கடவுளிடம்
வேண்டிக்கொண்டிருப்பாள்..

கடவுளே இந்த வாழ்க்கை
வெறுத்தவனின் வாழ்வில்
கொஞ்சம் மகிழ்ச்சி கொடு
என்று வேண்டுவதாய்
எண்ணி சற்று மனம் லேசாகும்..

அவளும் என்
வாழ்க்கை பயணிக்க
ஒரு காரணமாகிறாள்..

நான் காதல் கொண்டதை
கூறி வேண்டாமென
நிராகரித்தும் என்னுடன்
நட்பாய் தொடரும் ஒருத்தி..

அழகான மனம் கொண்ட
பெண்ணுக்கு சாட்சியல்லவா..

என்னையொருத்தி காதலிப்பதாய்
கூறி நான் மறுத்திட,முறைத்து
செல்லாமல் காதலை களைந்து
நட்புடன் பழகிடும் மற்றொருத்தி..

ஆண்களால் முடிந்திடுமா என
எனக்குள்ளே கேள்வி கேட்டு
விடை பெறமுடியாததன் காரணக்காரி..

ரகசிய பக்கங்களின்
ராணியாக சில தேவதைகள்
இல்லாமல் இல்லை..

அந்த பக்க ராசாக்களுக்கும்
ராணிக்கும் காரணங்களும்
நியாயங்களும் இல்லாமலில்லை..

அப்படிப்பட்ட கருப்பு
வர்ணப்பக்கங்கள்..
அதை அழகாக்கிடவும்
பெண்தான் இருந்திடுவாள்..

பேரின்பம் அதையும்தான்
தந்திடவும் முனைந்திடுவாள்..
முடிவெடுத்தால் உன்னையுமே
பித்தனாக மாற்றிடுவாள்..

அசுரனை அடக்கிடும்
வித்தையை அறிந்தவள்..
அமைதியாய் இருப்பவனை
அசுரனாக்கியும் விடுபவள்..

ஆணென்ற ஆணவத்தை
அவளிடம் காட்டாதவரையே
அந்த ஆணவமும் நிலைத்திடும்..

ஆணவத்தை காட்டிடவே நொடி
ஒன்று பொதும் அதுவெல்லாம் சுக்குநூராய் சிதறிவிடும்..


பசியில்லையென இரவு
உறக்கம் உறங்க முயன்றிட..
முறைத்தபடி முடியாதென்று
உண்டுறக்க வைத்திடும்
எனை பெற்ற என் தாயும்..

மறுபுரம் அங்கே மனையாளும்
எனக்கென்றே எதுவாயினும்
பார்த்து பார்த்து செய்திடுவாள்..

மகளென்ற சிறுதாயும் எனை
என்றும் அணைத்தபடி என்
வாழ்வின் அர்த்தமாய்
எந்நாளும் இருந்திடுவாள்..

அன்பாக அணைத்தபடி
எந்நாளும் இருந்திடுவாள்..
தன்னையாரும் சீண்டிடாமல்
இருக்கும் அந்த வேலைவரை..

தவறு அவள் இழைத்திடாமல்
அவளை நாமும் சீண்டிவிட..
கடவுள் வந்தும் பயணில்லை
அவள் கோபம் அடங்கும்வரை..

சர்ப்பத்தின் தலை கொண்ட
விஷம் போன்றவள் பெண்..
சீண்டாதவரை இழப்பில்லை
சீண்டிவிட இழப்தின்றி
வழியுமில்லை..

பெண்ணில்லா உலகம்
அதை படைத்திடுவோம்..
படைத்தது தவறென்னறு
உடன் அதை எரித்திடுவோம்..

© பினோய் பிரசாத்