...

1 views

அன்பு
அன்பு
ஆறுதலாகவும் இருக்கிறது
அழவும் வைக்கிறது

அன்பு
அரவணைப்பாகவும் இருக்கிறது
அலைக்கழிக்கவும் வைக்கிறது

அன்பு
இதயமாகவும் இருக்கிறது
ஈட்டியாகவும் பாய்கிறது

அன்பு
உண்மையாகவும் இருக்கிறது
உதைத்தும் தள்ளுகிறது

அன்பு
உயிராகவும் இருக்கிறது
ஊமையாகவும் இருக்கிறது

அன்பு
உள்ளமாகவும் இருக்கிறது
ஊனமாகவும் இருக்கிறது

அன்பு
உறவாகவும் இருக்கிறது
ஊசலும் ஆடுகிறது