...

8 views

தவிப்பு...

ஏனோ எப்போதும்
ஒரு தவிப்பு இருந்து
கொண்டு தான் இருக்கிறது…

எதிர்காலத்தின் மீதா
நிகழ்காலத்தின் மீதா என
அறியமுடியவில்லை….

நாம் செய்வது சரியா
இல்லை தவறா….
எல்லாவற்றிற்கும்
ஒரு அச்சம் தோன்றுகிறது…

நாற்பதை கடந்தவர்களின்
மனம் இப்படி தான் இருக்கிறது….
அல்லது இருக்குமோ…?

எல்லாவற்றிற்கும் ஒரு
பயம் வந்து தானாக ஒட்டிக்
கொள்கிறது….

தெருவை கடப்பதில் கூட
பலருக்கு ஒரு பதற்றம்
தானாய் வருகிறது…..

தானாய் துணிந்து
நின்று செய்து பல
காரியங்களுக்கு
மனம் துணை
தேடுகிறது...

ஏனிந்த  மாற்றம்....
ஏனிந்த பயம்…
பதற்றம் என
தெரியவில்லை……

அனைவருக்கும்
இந்நிலை
வருவதில்லை...
ஆனால்
பெரும்பாலானோர்
இதில் சிக்கிக் கொள்ள
தவறுவதில்லை...

தான் உலகமாய்
நினைக்கும் குடும்பம்
உதாசீனப் படுத்துவதால்
இருக்கலாம்…

உள்ளத்தில் உள்ளதை
பகிர்ந்து கொள்ள
நண்பர்கள் என அதிகம்
இல்லாததாய் இருக்கலாம்…

உள்ளுக்குள்ளேயே வைத்து
சோகங்களை சுமந்து
வலிகளை மென்று
கண்ணோரம் துளிர்க்கும்
கண்ணீர் துளிகளை
மெல்ல துடைத்து
நகர்தவளுக்கு இப்போது
ஏன் இப்படி ஒரு
அச்சம்… தவிப்பு….

அவள் கண்களில்
தெரியும் தவிப்பை
கண்டால் சற்று
அவளுடன் பேசுங்கள்…
நேரம் செலவிடுங்கள்…..

வயது முதிர்வதால்
உடல் சற்று தளர்வதால்
ஏற்படும் இந்த தவிப்பை
அவள் உலகமாய் நினைக்கும்
குடும்பத்தால் மட்டுமே
நிவர்த்தி செய்ய முடியும்…


அவர்களின் சின்ன சின்ன
ஆசைகளை நிறைவேற்ற
முயலுங்கள்….
அவர்கள் பேசுவதை
காது கொடுத்து
கேளுங்கள்….

வேறு எதுவும் அவர்கள்
வேண்டுவது இல்லை….

காலப்போக்கில் தன்
இடம் உரிமை பறி போகுமோ
என்ற தவிப்பை உணர்ந்தால்
போதும்….

புரிந்து கொள்ள
முயல்வோம்
முடிந்தால் உடனிருந்து
அவர்கள் கைபற்றி
அவர்கள் தவிப்பை
போக்க முயல்வோம்….🙏🙏🙏❤️

ந.ரா. சீதாலட்சுமி