குளிர்தரும் விருட்சமாக மாறி விடு.....
இறுக்கமான முகங்கள்
பெரிதாக ஒன்றும் சாதித்து விடுவதில்லை
வெறும் கொத்தான வெறுப்புகளையன்றி...
நீ அகத்தின் அழகை உன்
முகத்தில் புன்னகையால் நித்தம்
வரைந்ததால் தானோ என்னவோ
நீயறியாத உன் நேசங்கள்
உன்னைச் சூழ தானாகவே வளர்ந்தவாறு....
நாம் நினைத்தவுடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ள நற்பண்புகள்
ஒன்றும் சாலையோர சாமங்கிப் பூக்களல்ல
அது பக்குவமானவர்களால்
பார்த்துப் பார்த்து பதிக்கப்பட்ட
பெறுமதியான இரத்தினங்கள்....
நீயும் எங்களுக்கு அலங்காரமாக
தென்பட்டது உனக்குள் உன் பெற்றோரும்
கற்றோரும் பதித்து வைத்த
நற்பண்புகளால் என்பதை நான்
சொல்ல வேண்டியதில்லை.....
கற்றுத்தர நல்லாசான் அமைந்துவிட்டால்
புத்தகங்கள் தேவையில்லை
அதற்கு நீயும் ஒரு உதாரணம்
என்பதை நான் என்னளவில் புரிந்து கொண்டேன்...
உன் ஈகோக்களை பொறுமையாக
கையாண்டதால் தான் அற்பப் பிரச்சினைகள்
எனும் உலக மாயைக்குள் நீ
தடுமாற்றமின்றிப் பயணிக்கிறாய்.....
உன்னை ஒருமையில் விழிக்கையில்
உனக்கு சங்கடமாக இருந்தாலும்
நான்...
பெரிதாக ஒன்றும் சாதித்து விடுவதில்லை
வெறும் கொத்தான வெறுப்புகளையன்றி...
நீ அகத்தின் அழகை உன்
முகத்தில் புன்னகையால் நித்தம்
வரைந்ததால் தானோ என்னவோ
நீயறியாத உன் நேசங்கள்
உன்னைச் சூழ தானாகவே வளர்ந்தவாறு....
நாம் நினைத்தவுடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ள நற்பண்புகள்
ஒன்றும் சாலையோர சாமங்கிப் பூக்களல்ல
அது பக்குவமானவர்களால்
பார்த்துப் பார்த்து பதிக்கப்பட்ட
பெறுமதியான இரத்தினங்கள்....
நீயும் எங்களுக்கு அலங்காரமாக
தென்பட்டது உனக்குள் உன் பெற்றோரும்
கற்றோரும் பதித்து வைத்த
நற்பண்புகளால் என்பதை நான்
சொல்ல வேண்டியதில்லை.....
கற்றுத்தர நல்லாசான் அமைந்துவிட்டால்
புத்தகங்கள் தேவையில்லை
அதற்கு நீயும் ஒரு உதாரணம்
என்பதை நான் என்னளவில் புரிந்து கொண்டேன்...
உன் ஈகோக்களை பொறுமையாக
கையாண்டதால் தான் அற்பப் பிரச்சினைகள்
எனும் உலக மாயைக்குள் நீ
தடுமாற்றமின்றிப் பயணிக்கிறாய்.....
உன்னை ஒருமையில் விழிக்கையில்
உனக்கு சங்கடமாக இருந்தாலும்
நான்...