...

6 views

பறவை 🐦
உன் நம்பிக்கையை சிறகுகளாக்கி
எல்லையற்ற உலகை வளம் வருகின்ற-நீ
என்னையும் அழைத்துச் செல்வாயா!

நீயே ஒரு சிறந்த ஆசிரியை- கற்றுக்கொடு
உலகிற்கு உந்தன் ஒற்றுமையை
மற்றவருக்கு தீங்கு தரா - உன்
வாழ்க்கை முறையை கற்றுக்கொடு
வறியவருக்கு இரங்கி உதவும்- தானம்
என்னும் விளக்கை இவ்வுலகில் ஏற்றிவிட்டு.

கூட்டமாக பறந்து கூட்டமாக உண்டு
பாசத்தை மட்டுமின்றி உணவையும் பகிர்ந்து
கூடி வாழும் உன் நேரிய பண்பை
மண்ணாய் கிடக்கும் மக்கள் மனதில் விதைத்துவிடு.

எழுத்துகள் இல்லா உன் பாஷைகள்
இசைக்கருவி இல்லா மெல்லிசைப் பாடல்
இனிமையாக்கும் மாலைநேரத் தென்றல்
என்னையே மறக்கின்றேன் உன் இன்னிசையில்
பல்வேறு மொழிபேசும் மனிதனை விட
பாஷையில்லா கொஞ்சும் மொழி பேசி - என்னை
வசியப்படுத்துகின்றாயே உன் வசம்;

இன்னும் எத்தனை காலம்
தவம் செய்ய வேண்டுமோ!
உன் போல் பறவையாய் பிறக்க!!
இவ்வுலகில் சிறகடித்து பறக்க!!!