...

2 views

கவனம் சிதறி போனது..

மாசில்லாத மதியவளை
மதிய வேளை கண்டநொடி
கண்ணெதிரே சூரியனும்
சுட்டெரிக்க.. குளிர்பனியின்
பிரதேசத்தில் பிராவாகித்தேன்
அந்தநொடி.. குளிர்போக்க
அணைக்கும் நெருப்பை
ஒத்து நெருங்கினேன் அந்த
மதியதன் போக்கின் பின்னே..
திரும்பி ஒருபார்வை வீச..
திரும்பியது அனல்காற்று..
கனவிலும் காணாத கங்கை
மகளை கண்டதால் நிலை
அறியாது அலைகின்றேன்..
கவனம் சிதறி போனது..


முடியவில்லை என்று அன்று
நின்றிருந்தேன்.. மூச்சு சற்று
வாங்க மலை ஏற்றமதில்..
முந்தானை அதைவீசி நடந்து
வந்தாள் பைங்கிளி அவள்..
முந்தி அவள்போக.. மூச்சும்
தீர்ந்தே போனது அவளின்பின்
அழகை அழகாய் ரசித்து
பார்க்கையிலே.. அம்மணி
அவளை அக்கணமே முந்த
முயற்சி கொண்டு முகம்பார்த்து
ரசிக்கலாம் என்று முயலுங்கால்
முந்தி போனேன் நானும்
போகும் இடம்தாண்டி வழிமாறி
கவனம் சிதறி போனது..


புலப்படவில்லை என்று
காத்திருந்தேன் நிலவுக்காக..
நிலவில்லா மாடத்தில் நிலவின்
பிரதிபலிப்பாய் வந்தாள் அவள்
நின்றாள் என்மனதில் நிலவாய்
அவள்.. நிலவின் நிறமும்
தோற்றமும் மாறலாம்.. நிலவும்
அவளிடம் தோற்பதே அவளழகு..
நிலாவில் கால்பதிக்க மல்லாடி
மானிடர்கள் அனைவரும் ஆவல்
கொண்டது போல்.. நிலாவையே
மணமுடிக்க ஆவல் கொண்டேன்..
தூரத்தில் கண்ட நிலவைஎண்ணி தூங்காமலே விழித்திருந்தேன்..
கவனம் சிதறி போனது..


அறியவில்லை வழியெது என்று
வழிமேல்விழியுடன் காத்திருந்தேன்
வழிகாட்டும் நண்பனின் வரவுக்காக..
வரவில் வந்தது வான்மதியின்
சிநேகிதி போலும்.. வடக்கே
வந்தவள் திளைத்த என்னையும்
பக்குவமாய் அவள் வழியாய்
பாதை காட்டிபோக வைத்தாள்..
போக்கின் வழியறியாது போதை
போட்டாற்போல்.. ஜொலித்தவள்
போகுவிதமாய் போகலாமென்று
போய் என்மனதில் பொய்யாய்
கூறியது தான் யாரோ..நடப்பவள்
நகரும்விதம் பார்த்து நடந்ததால்..
கவனம் சிதறி போனது..

© CG Kumaran