...

2 views

அவளும் பெண்தானே
இப்படியான நீண்ட
வலிநிறைந்த நாட்களை
என்னால் சமாளிக்க முடியும்
பல இரவுக்கள் பல தனிமைகள்
பல நாட்களை இதனைவிட
ரணம் நிறைந்ததாக
சுமந்து கொண்டு
கழித்திருக்கிறேன்

அன்று
அந்த சமயங்களில் என்னை நானே
வெறுத்திருக்கிறேன்
என்னைநானே தனிமையில்
தூக்கி எறிந்திருக்கிறேன்
என்னை நானே காயப்படுத்தி
இருக்கிறேன்
நான் என்ன தவறு செய்தேன்
என என்னோடு நானே
சண்டையிட்டிருக்கிறேன் ஆனால்
இன்று அப்படி அல்ல
இந்த வலிகள் இவை என்னை
கொன்றாலும் கூட நான்
மரணித்துப்போகமாட்டேன்

ஏனென்றால் என்றும்
உனக்கு மட்டுமல்ல நீ யாருக்குமே
பொய்யானவளாக இல்லாதபோது
எப்பொழுதும்
எந்த காயங்களிற்கும் உன்னை
வருத்திக்கொள்ளாதே என்ற
உண்மைகளை இந்த
வாழ்க்கை எனக்கு ஆழமாகவே
சொல்லித்தந்திருக்கிறது


#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran