...

5 views

அலைபேசி காதலால் என் மனதில்
அலைப்பேசி காதல்

குரலை மட்டுமே கேட்கிறேன்
அவளின் குழந்தை மனதை
கண்டு வியக்கிறேன்
தூரங்கள் தெரியாமல்
துணையாக கைப்பேசி
தூங்கும் நேரத்தில் கூட குறுஞ்செய்தி வாயிலாக
அவளை காண்கிறேன்
முகம் கண்டதில்லை
முகவரியும் தெரியவில்லை
ஆனால் அவளின்
அன்பிற்கு மட்டும்
ஏங்கி தவிக்கிறது
என் மனம்
அவளை மனதில்
நிறுத்தி விட்டேன்
அவளின் பாசத்தில்
பாரில் அவளை தவிர
என் மனதில் யாரும்
இனி இல்லை

முகம் தெரியாத அலைபேசி காதலால்