...

8 views

நான் நேசிக்கும் கண்ணீர் நீ
நான் நேசிக்கும் கண்ணீர் நீ :-
ஆம்
என்றும் விடுபட்டு விடுபட்டு

நொடிக்கொருமுறை
இதயத்தை கீறி கீறி
பார்த்துவிட்டு செல்லும் உன் நினைவுகள்

சற்றே கிழிந்து தொங்கும்
கந்தல் துணிகளை
போல்

உன்
உணர்வு குருதிகள்
நான் எழுத எத்தனிக்கும்
வேளையில் கை ரோமங்களிடையே
துளைத்து சென்று

விழியில் வழிந்து
வெளிப்படுத்தியது
என் கண்ணீரிலும் நீ தான் இருக்கிறாய் என்று..!!

© மௌனன்