...

9 views

என் காதல் ராட்சசி💞
விழியசைவில்
விரல் தீண்டி

எந்தன்
இதழ் முத்தத்தில்
இதயம் தீண்டி

இடையணைப்பில்
இளமை தவிப்பில்
வியர்வை சுவையில்
இமயம் சூழும் பேரின்பம்
இதயம் கண்டிட
உன்னில் உறைந்தேனடி..!

உந்தன் அரவணைப்பில் மட்டும்
உன் சேலை முனைப்பில் இளங்கனியின் சுவைப்பில்
விரல்கள் கோலமிட
இதழ்கள் ஈரமிட
உன்னுடல் நாணமிட
நானும் உன்னுடன்
ஊடலிலே உறைந்திட
உச்சம் தீர்க்கும் சொப்பணங்கள்
உன்னிடம் கண்டேனடி

என்ன வசியம் கொண்டாய்
எனை தின்று தீர்த்திட
இன்றும் எனை மறந்து திரிகிறேனடி
என் காதல் ராட்சசி..!

© Manis✒️தனிமைகாதலன்