
29 views
கசங்கிய தாள்
கசங்கிய தாள்களில்
கண்டுகொள்ளப்படாத
கவிதைகளின் கண்ணீர்
குவிந்திருக்கும்.!!
காதல் பிரிவின் உணர்வு
ஊமையாக்க பட்டிருக்கும்.!!
இளகிய இதயத்தின் வலி
கெஞ்சிய வரிகளிருக்கும்.!!
உருகிய மனதின்
உறுதியான நம்பிக்கை
புதைந்திருக்கும்.!!
பூக்களின் புன்னகை பூத்த
வதனத்தின் வாடல்
வட்டமிட்டுருக்கும்.!!
கசங்கிய தாள்களில்
கசங்கா உணர்வுகள்
எரிந்து கொண்டு
எறிபட்டிருக்கும்.!!!
© புதியவன்
#tamilpost #poem #WritcoQuote #yqwriter #Love&love #Feelings #heartbroken #jothi
Related Stories
50 Likes
8
Comments
50 Likes
8
Comments