...

9 views

திவி என்னும் தேவதை
என் தேடல் நீண்டு இருக்க.
நித்தம் ஒரு நிலவலாய் நான் இருக்க
நான் என்ன நிலவு என்னை தாண்டிய ஒரு ஒளி நான் கண்டேன்
அவள் என்னை கடந்து செல்ல நட்சத்திர கூட்டம் ஒன்று அவள் பின் சுற்றி திரிய,
வியந்து போனேன்,
இது என்ன மாயம் எத்தனையோ கவிஞர்கள் நிலவினை வர்ணித்த பொழுதும் இவள் போல் யாரும் இல்லையே, அந்த நிலவு பெண்ணாக உருவானது எப்பொழுது, இந்த பூலோகம் விந்தை தான் கற்கள் கொண்டு சிலை வடித்து அதற்கு உயிர் கொடுக்க நினைத்த உலகில் சிலையே உருவாகி உயிர் பெற்று வந்ததோ!
என் மொழி மீது எத்தனை காதல் நான் கொண்டு இருக்க உன் மீது அனைத்தும் மாறுவது ஏனோ!
என் மொழியும் என்னோடு சேர்ந்து சோர்ந்து போகவே காரணம் உன்னை வர்ணிக்கவே.
எந்தன் எழுதுகோல் உன் பெயர் தீண்டவே தினம் தினம் என்னிடம் முறையிடுகிறதே.
நான் கண்ட தேவதையே

© அருள்மொழி வேந்தன்