...

2 views

பொன்மாலைப் பொழுது
நீல வானம் தாய்மை கொள்ளும் நேரம்,
இலைகள் காற்றை உரசி காதல் பேச,
சூரியன் எதோ ஒரு வழி தேடி
எட்டிப்பார்க்க எண்ணும் போது,
வீடு செல்லும் பரபரப்பிலும்,
கை அசைத்துச் செல்லும் பறவைகள்,
சிறு புன்னகையுடன் வழி அனுப்பிவிட்டு,
கண்கள் காட்சிகளால் நிறைய,
மனம் மட்டும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே,
நான் மட்டும் இங்கே தனிமையில்.
© manjupriya❣️