...

10 views

மௌனம் பேசுகிறது
என் இதயத்தின் ஏக்கம்
என்னவென்று எனக்கே தெரியாத சமயங்களில் தான்
மௌனம் பேசுகிறது.....
யாரும் அறியா பாஷையில்
பல கதைகள் பேசுகிறது.....
விழிகளின் மூலம் எதையெதையோ யாசிக்கிறது....
யாரும் அறியா ஆசைகளை,
எவர் வசமோ சேர்க்கிறது....
வார்த்தைகளின்றி
நான் மௌனியான நேரம்,
எனக்காய் பேசும் என் மௌனம் தான் எத்தனை அழகு!

© Ebinrider