...

3 views

செவிலியர்களின் குமுறல்
வரவேண்டாம் வரவேண்டாம்
தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம்

அணியுங்கள் அணியுங்கள்
மறக்காமல் முககவசம் அணியுங்கள்

தரவேண்டாம் தரவேண்டாம்
மற்றவர்களுக்கு பிரச்சனை தரவேண்டாம்

தவிக்கிறோம் தவிக்கிறோம்
ஆஸ்பத்திரியில் இடமில்லாமல் தவிக்கிறோம்

இடமில்லை இடமில்லை
மயானத்திலும் இடமில்லை

போகவேண்டும் போகவேண்டும்
நாங்களும் வீட்டிற்கு போகவேண்டும்

பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும்
எங்கள் குழந்தைகளை பார்க்கவேண்டும்

மனிதர்கள்தான் மனிதர்கள்தான் நாங்களும் மனிதர்கள்தான்

போதும் போதும்
இது வரை இழந்தது போதும்

வரவேண்டாம் வரவேண்டாம்
தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம்

© Amarnath N