...

3 views

ஓர் அழகான கவிதை
ஓர் அழகான கவிதை
தன்னை தானே உற்றுப் பார்த்தது
எத்தனை வர்ணனை!
எத்தனை எதுகை!
எத்தனை மோனை!
அப்பப்பா... இவனல்லவா கவிஞன் என்று மெச்சிக் கொண்டது.
எழுதிய கவிஞன் மெல்லமாய் நகைத்தான்
தான் எழுதிய கவிதை உற்றுப் பார்த்தான்
எத்தனை வலிகள்!
எத்தனை ஏமாற்றங்கள்!
எத்தனை தோல்விகள்!
சிதைந்து போன என் வாழ்க்கையை எத்தனை அழகாய் வர்ணித்திருக்கிறது இந்த வார்த்தைகள் என மெச்சிக் கொண்டான்.
கவிஞன் எழுதிய கவிதைகள் அழகா?
கவிதையை வடித்த வார்த்தைகள் அழகா?
இரண்டும் இல்லை.
அவை வர்ணிக்கும் உணர்வுகள் தான் அழகு.

© Ebinrider