...

5 views

வெண்ணிலவை சிறைபிடித்து..
வெண்ணிலவை
சிறைபிடித்து
வைப்பது தான்
யாரோ..

வெண்ணிலவை
வெள்ளையிட்டு
தந்தவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
தமதென உரிமை
கொண்டாடுபவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
பங்கிட்டு மாற்றி
உருமாற்றுபவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
பூமியில் பார்த்து
காதலிக்காதவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
கண்டு அலையாய்
ஆர்பரித்து எழுபவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
மேகக்கூட்டத்தில் இருந்து
பிரித்து வைத்தவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
வண்ணம் மாற்றி
விளையாடுபவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
தினமும் ஏக்கத்தோடு
தேடிஅலைபவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
கனாக்களில் கண்டு
ரசிப்பவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
பார்த்து பசியாற
கற்றுக்கொடுத்தவர் தான்
யாரோ..

வெண்ணிலவை
கயிறால் அவிழாது கட்டி
இழுத்து பிடிப்பவர்தான்
யாரோ..

வெண்ணிலவை
மேகங்களை தள்ளிவிட்டு
மதிமுகத்தை மறைப்பவர் தான்
யாரோ..

அனைத்தும்
நானாவேன்..
வெண்ணிலவாய்
நீயிருந்தால்..

வெண்ணிலவை
பொலிவு குறைத்து
காட்ட முன் வந்தவள்
நீயே..

வெண்ணிலவின்
பிரதிபலிப்பாய் நீயா..
வெண்ணிலவே
நீதானா..

வெண்ணிலவின்
சிநேகிதி நீயானால்
உன் சிநேகிதன்
நானாவேன்..

வெண்ணிலவை
தேடி அலைபவன் நானாவேன்..
நிலவாய் நீயானால்..
நின்நிழலாய் நானிருப்பேன்..

© CG Kumaran