...

4 views

love aim
உன் விரல் கோர்த்து நடக்க ஆசை...
நடக்கும் போது உன் நிழல் என் மேல் விழ ஆசை
கொட்டும் பனியில் உன்னுடன் தூங்க ஆசை.....
தூக்கத்திலும் என் கனவில் நீ மட்டும் வர ஆசை.....
நான் சமைக்கும் போது நீ என் அருகில் இருக்க ஆசை ....
சமைத்த உணவை உன்னுடன் மட்டும் உண்ண ஆசை .....
நான் அழும்போது ஆறுதலாக நீ பேச ஆசை.....
பேசும்போது உன் தோள் சாய்ந்து நான் உறங்க ஆசை....
உனக்குத் தெரிந்த நபர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் நீ தேடி வர ஆசை
தேடி வந்த உன்னை யார் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்க்கு அழைத்துச் செல்ல ஆசை....
நிமிடங்களை உன்னிடம் மட்டும் செலவழிக்க ஆசை ...
செலவழிக்க நேரமில்லை என்று கடிகாரம் சொல்ல ஆசை ....
என் மனதில் நினைத்ததை நீ சொல்ல ஆசை......
நீ சொல்லிய வார்த்தைகளை நான் ரசிக்க ஆசை .
ரசிக்கும் போது நீ என்னை பார்க்க கூடாது என்று ஆசை
நீ பனிக்குச் செல்லும் போது பத்திரமாக வழி அனுப்ப ஆசை..
நீ வேலை செய்யும் போது உன்னை அலைபேசியில் அழைத்து தொல்லை செய்ய ஆசை.....
நீ எப்ப வருவாய் என்று தெரியாமலே
படியில் காத்திருக்க ஆசை ......
நமக்கான ஒரு உலகம் ஒன்று இருக்க ஆசை ......
அதில் நாம் நம் குழந்தைகளுடன் விளையாடா ஆசை ....
என் ஆசைகள் நிஜத்தில் நிறைவேறஆசை ....
இல்லையென்றால் உன் நினைவுகளுடன் என் வாழ்நாள் முடியவேண்டுமென்று ஆசை........
© dhivya dream girl