...

1 views

கோவிட் நாடகம்

கிருமி நாடகம் உலகமெங்கும்,
அதை ஊதி பெரிசாக்கும் ஊடக வன்மம்,
ஏதும் அறியா மனித இனங்கள்,
அவனை அழிக்க துடிக்கும் பெரிய முகங்கள்,
இந்த உலக நாடகத்தால் மக்கள் பீதியாகி,
அவர்கள் பொருளாதாரம் பாதியாகி,
முக மூடிக்குள் பதுங்கும் மருத்துவம்,
உண்மையை மறைக்கும் தனித்துவம்,
போதுமடா போதுமடா,
ஊசிகள் போதுமடா,
உண்மை தெரிந்தும் அவற்றுக்கு பணிந்தோமடா,
உணவே மருந்து என்ற தமிழ் பொன் மொழியை,
மருந்தே உணவு என்று மாற்றி அமைத்து,
மருத்துவம் வெற்றி பெற்று,
மக்கள் தோல்வியுற்று,
நமக்கு நாமே என்ற முடிவுடன்,
காத்துக்கொள்வோம் துணிவுடன்.
- பிராங்கிளின்