...

6 views

தீவு கூட்டம்
உருவகம் உறுபோடும்
உறுதியாய் இருக்கும் மனமும் உறுதியற்று
உழலும்
உறங்காது நடு நிசி நிசப்தம் கொண்டு முழிக்கும் விழிகளில் எரிச்சல் சித்திரையாய் கொழுத்தும் தீயாய்
தீர்வு இன்றி தீவுகளில் திளைக்க வைத்திடும்
தள்ளாய் தடுக்கிடும்
தவமும் தாங்கும்
தாகம் தீர்க்கும் மனவேனில்
வெதும்பி வெறுமையோடு வெறுங்கால்கள் வரட்டும் வரட்டும் பாதம் நோவும்
நித்தம் நித்திரை கெட்ட பின்னும் முன்னிரவில் முழுங்கும் இருளில் பனி உருண்டையோடு சண்டை யிடும் சமரசம் இன்றி சமாதானம் தினந்தோறும் தீரா மோதல் கொண்டு ஆகாய வசீகரம் ஏராளமான ஏவல் தாராகைகள் நடுவில் ஒளிரும் கொண்மூ மிழியின் மையல் மொழி அறிந்து தொடுவானம் தொடர்ந்தான் 🤍


© Ash(ஈசன் )