...

12 views

என் பயணம்

கதிரவன் முழித்திட
பூக்கள் எழுந்திட
காலை நேரம் ஆனதே

மக்கள் குவிந்திட
பரவசம் பெருகிட
காலை சந்தை நிறைந்ததே

அலாரம் அடித்திட
கண்கள் சிமித்திட
ஆன்லைன் வகுப்பும் ஆரம்பமானதே

பேராசிரியர் பேசிட
கண்கள் சொக்கிட
பொழுதாய் பாடங்கள் நடந்ததே

மனம் வெறுத்திட
உணவை ருசித்திட
என் பயணமோ கடந்ததே..
© All Rights Reserved