...

4 views

வாழ்வெனும் பேருவகை
♥️
இந்த ஆண்டு எதை எல்லாம் கடந்து வந்தோம் என்று நினைக்கிறீங்களா? கஷ்டங்கள் துன்பங்களை தூக்கி வையுங்க. இன்று இந்த நொடி சந்தோசம் அவ்வளவும் தான் வாழ்க்கை. இவ்வளவு நாள்ல யார் மேல எவ்வளவு அன்பு வைச்சிருந்தீங்களோ அதை வெளிப்படுத்தாம இருந்திருக்கலாம். அதை எல்லாம் வெளிப்படுத்திக் கொள்ளுங்க. கோபம் வருகுதா அதை அப்பவே காட்டிட்டு மறந்து போங்க. மனசில தோன்றுற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திற தான் வாழ்க்கை. இங்க எல்லாத்தையும் மனசில கட்டி வெச்சிட்டு இருக்கிறதில என்ன பயன்?...
எனக்கு இது பிடிக்கேல இது பிடிச்சிருக்கு என்று மனம் திறந்து சொல்லுற அளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த யாருக்கும் தெரியிறதில்லையே...
கோட்பாடுகள் விதிகள் என்று உங்களை நீங்களே அடைத்துக் கொள்ளுறது வாழ்வாகாது. இங்க இன்னொருத்தரை முன்னுதாரணமாய் காட்டி தான் அதை பின்பற்றி நடக்க நினைக்கிறோமே தவிர நாங்களாய் எதை முன்வந்து செய்ய யோசிக்கிறோம்.. ? அவன்...