...

5 views

ஒலியும் ஔியும்
அலுவலகம் செல்லும் நேரம்
அமைதியாக அதிர்ந்து கொண்டே இருந்தது அந்த சாலை.

வாகன இரைச்சல்கள் அதன் ஒலிப்பான்களுடன்
முன் செல்லும் வாகனத்தை
முந்தி சென்று முன்னேற துடிப்பவர்களாய் ஒவ்வொருவருக்கும் எண்ணம்.

நடை பாதையில் கடப்பவர்களுக்கும்
குதிரைக்கு இடம் வலமாக
பார்வையை மறைப்பதை போல
தங்கள் காதுகளுக்கு அமைத்து கொண்டனர்.

பெற்றவன் அழைத்தாலும் கேட்க இயலாத கல்லூரி செல்லும் குமார குமரிகள்...

உற்றவன் அழைத்தாலும் உளறி
கொண்டே காற்றை இழுத்து இழுத்து ஊதி செல்லும் உத்தமர் உத்தமிகள்...

காது பூட்டும் கருவி இல்லாததால் எனக்கு மட்டும் கேட்டது சார் என அவன் அழைத்தது காரணம் அவனை விட...அவனை விட ஒரு படியே மேலானவன்.

நின்றோ நடந்தோ கேட்கும் நிலையை அவர்களால் அனுக்ரகம் அளிக்கப்படவில்லை அவனுக்கு.

பத்து ரூபாய் தாளில் சப்தம் வராது என்பதால் சில்லரைகளாக எடுத்து அவனது கைகளில் கொடுத்தேன்
வாங்கியவன் ஒலி எழுப்ப ஆரம்பித்தான் நான் நகர ஆரம்பித்தேன் இனி இந்த ஒலியோடு ஔியாய் அவர்களுக்கும் கேட்கும் எனும் நம்பிக்கையோடு...


© சிவா