...

5 views

தமிழ் பஞ்சம்
மஞ்சள் முக அழகி
மருதாணி சிகப்பழகி
நெய்யில் விளக்கேற்றும் நெருப்பு நிற அழகி
மாமன் தோள் சேர மணிக்குயில் விரும்புதடி
மாடப்புறா ஒன்று மாமனையே தேடுதடி
நீ ஓர பார்வை ஒன்னு பார்த்துபுட்டா
ஓடக்கரை மீன் எல்லாம் ஒரு முழம் துள்ளுதடி
பனித்துளி சேர்த்து வைத்து உன் பவள மேனியை நீர் ஆற்றிடவா
தெம்மாங்கு பாட்டு ஒன்றை தேடுகிறேன்
அது தென்றலிலே மிதந்து உன்னை சேர பாடுகிறேன்
நீ என் மஞ்சம் வரும்போது
பஞ்சமானது என் தமிழ்
உன்னை வர்ணிக்க