...

28 views

முதல் காதல்
முதல் காதல்
ஆயுள் வரை "பொக்கிஷம் "..

பள்ளிப் பருவத்தில்
அவன் என்னோடு தோழனாக
நடைப்போட்டான்...

என்னோடு யார் பேசினாலும் அவனின் கோபங்கள் மௌன யுத்தம் புரிந்ததோ என்னவோ என்னை கண்டு முறைத்து கொண்டே போடி என்றே விரட்டுவான்...

வயது கூட கூட இருவரின் மனங்களில் காதலின் விதை துளிர் விட தொடங்கியது...

என் நாணமோ சொல்ல மறக்க

அவன் பிடிவாதமோ என்னை நெருங்கி உறவாட மறக்க

வேற என்ன சொல்ல

ராட்சஷி இவளே அவனுக்கு காதல் போர் தூது விட்டாள்

இவள் அனுப்பிய குறுஞ்செய்தி முத்தங்களுக்கு
அவன் வீழாமல் இருக்க முடியுமோ

காதல் கொண்ட பெண்மை
நாணம் பார்ப்பதில்லை

இவள் அவனின் "காதல் ராட்சஷி ".....




© Aadhira