நாங்கள் எல்லாம் இப்படித்தான்🖤
வார்த்தை விளையாட்டுகளில் யாரையும் வஞ்சித்ததில்லை,பெரிய புரட்டுகளை புரட்டி தள்ளி யாரையும் ஏய்த்ததில்லை,சிரிப்பிற்கு காரணம் வகுக்க சிறிதுகூட முயன்றதில்லை,எங்கே இன்பமென எப்போதும் தேடி அலைந்ததில்லை,வெற்று வெற்றிகளை வென்றெடுப்பதிலும் விருப்பமில்லை,புகழுரைகளை புனைந்து கூறி போட்டியிடுவதில் அர்த்தமில்லை,தண்ணீர் சோறு என வறுமைப்பாட்டும் பாடியதில்லை,ஆடை அலங்காரங்கள் கொண்டு யாரையும் ஆய்ந்ததில்லை,அழகின் அழகற்ற வரையறைகளை கிஞ்சிற்றும் கொண்டதில்லை,எந்த ஏக்கங்களையும் ஏறெடுத்து நோக்கியதில்லை,காரணங்களை சொல்லிவிட்டு காரியங்கள் செய்வதில்லை,அன்பென்று ஆனபின்பு எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லை,இழந்துவிட்ட எதுவிற்கும் எப்போதும் அழுததில்லை,இவையெல்லாம் எனக்கானதென பிரிவினைகள் பேணவில்லை,எவரும் படித்துப்போக எதுவெதுவோ எழுதவில்லை,நினைத்ததை நினைத்தபடி நின்றபடி நிகழ்த்தவில்லை,நடப்பதெல்லாம் நன்மைக்கென விதி வீணை வாசிக்கவில்லை,நடந்ததெல்லாம் நினைவுகளாக்கி இருப்பவரை கொன்றதில்லை,எதுவும் விளங்காமல் ஏறுமாறாக பேசியதில்லை,காலத்தை வசமாக்கிவிடும் கனவுகளை...