...

5 views

இன்னமும் சொல்லவா?
இவளை போல்
யாரும் இல்லையென சொல்லவா
இவளை போல்
யாரும் இனி பிறப்பது இல்லையென சொல்லவா!!

எங்கு காண்பேன்
இப்பேரழகி போல் ஒருத்தியை
என்று சொல்லவா
எங்கு காண்பேன் கானக் கன்னியினை போல்
எழில் தேகத்தை
என்று சொல்லவா!!

இயற்கை கொடுத்த வரம்
இவள் உடலின் வளமை
என்று சொல்லவா
பிரம்மனின் திறமை
இவள் கண்களின் வலிமை
என்று சொல்லவா!!

அரிதிலும் அரிதனாது
இவள் பிறப்பு
என்று சொல்லவா
அரிவை உன்னை தொட்டால்
நெருங்காது இறப்பு
என்று சொல்லவா!!

இவள் தேவலோக தேசத்தின்
இளவரசி என்று சொல்லவா
இவள் மண்ணுலகை ஆளவந்திருக்கும்
ஊர்வசியின் சொந்தக்காரி என்று சொல்லவா!!

இவள் யாழ்மீட்டும் குயில்
என்று சொல்லவா
இவள் தோகை விரித்தாடும்
அழகு மயில் என்று சொல்லவா
இவள் மண்ணுலகை
மயக்க வந்து மாயை என்று சொல்லவா!!

பட்டினிக் கிடந்த கண்களுக்கு
விருந்தளித்தவள் என்று சொல்லவா
இதழ் எனும் அருவியில்
தேநீர் பருக வாய்ப்பளித்தவள் என்று சொல்லவா!!

மதியினை மயக்கி
மனம் பிறழ வைப்பவள் என்று சொல்லவா
லட்சணங்கள் யாவையும் தன்னுள்ளே
வைத்திருக்கும் பாவையிவள் என்று சொல்லவா!!

அற்புதங்கள்
அத்தனையையும் வைத்திருக்கும்
அழகுச் சிலை என்று சொல்லவா
அதிசியங்களை சுமந்து
பரவசமளிப்பவள் என்று சொல்லவா!!

வெள்ளை பல்லழகி
உந்தன் பேச்சழகில் வீழ்ந்த கதை சொல்லவா
உன்னை அடைந்திடவே
இப்பிறவி கொண்டேன் எனும் உண்மையை சொல்லவா!!

இன்பங்களை ஓவியமாய்
தன்னுடலில் வரைந்து
இளங்காளை எந்தன்
மனதை கரைத்துவிட்டவள் என்று சொல்லவா
காலமெல்லாம் நீங்காத
காதல் நோயினை
எனக்கு பரிசாய் தந்தவள் என்று சொல்லவா!!

இச்சையுடன்
உன்முன்னே நான் நிற்க
இன்ப சுரங்கமாய்
என்முன்னே நீயிருந்த கதை சொல்லவா
பார்த்தது போதுமென்று
நெருங்கி அருகில் வர
அனுமதி கேட்ட கதை சொல்லவா!!

நின் நெருங்கிய மார்போடு
எந்நெஞ்சியிரண்டும் மோதிய கதை சொல்லவா
உன் சிவந்த மலரிதழில்
முத்தமொன்றுயிட தவமிருந்த நாட்களை சொல்லவா!!

வாழும் காலம் வரை
உன்னோடு வாழவேண்டும் என்று சொல்லவா
வாழும் காலம் வரை
என்னோடு நீயிருக்கவேண்டும் என்று சொல்லவா!!

இன்னமும் சொல்ல
அனுமதி கொடு
அதுவரை காத்திருப்பேன்.
- சங்கத்தமிழன்.