...

55 views

காதலின் காதல்
ஒருமுறை
காதலுக்கு
காதலிப்பவர்கள் மேல்
காதல் வந்தது

சரி காதலித்து தான் பார்ப்போமே என காதலர்களை பின் தொடர

கண்டது

கண்டதும் காதல்
காணாமல் காதல்
கல்லூரி காதல்
காவிய காதல்
காசிருந்தால் காதல்

காதலில் பலவகைகள்
கண்டதும் காதல் கொஞ்சம்
குழம்பித்தான் போனது

கண்டதும் காதலை
கண்டதும் ஏனோ
காதலுக்கு
காதல் பிறக்கவில்லை

காணாத காதலில்
காதலுக்கு காதல்
காணமல் போனது

கல்லூரி காதலில்
காதல் பாடம்
கற்றது

காவிய
காதலை கண்டு
காதல் கதறி அழுதது

காசிருந்தால்
காதலில் காதலுக்கு
கசப்பு வந்தது

என்னடா காதலென்று
காதல் நொந்த நேரத்தில்
காற்றில் பறந்த
கவிதை காகிதம்
காதலின் கரத்தில் விழுந்தது
வாசித்த காதல்
காதலில் விழுந்தது...

© Meera