...

13 views

தண்டவாளங்களின் காதல்...
உனக்கும் எனக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசங்களில்லை...

இணையாது போகினும்
பயணப்படும்
ரயில் வண்டிகளுக்கு
பாதையாகிப் போகிறாய் நீ...

இணையாது போகினும்
பயணப்படும் காதலுக்கு
கவிதையாகிப்
போகிறேன் நான்....

இணைந்தால்தான்
வாழ்வென்று
ஒன்றுமில்லையே
இணையாது போனாலும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்வொன்றும்
இங்குண்டு...

பிரித்து வைத்து
ரசித்துப் போகும்
காலங்களுக்கு மத்தியில்
இணைத்து வைத்து
ரசித்துப் போகும்
இந்தக் கவிதைகள்
என் காதலிற்கு வரமே...

எந்த முற்றுப்புள்ளியிலும்
இணைத்து வைக்க
எத்தனிக்காத
காலங்களை புறந்தள்ள
என் வரங்களை
பற்றியபடிதான்
உன் தவங்களுக்காக
பயணித்து கொண்டிருக்கிறேன்...!

© நித்திலன்...🎭