...

5 views

தீர்வு ஒன்று எழுதுவாயா?
மாலை பொழுது மலர்கையில்
மங்கையின் மனம்
மன்னவனை தேடுதே
தூக்கம் தொலைத்து விட
ஆசைகள் மெல்ல அரும்புதே,

வளர் பிறையாய்
காதல் வளர்கையில்
காமம் வந்தென்னை வாட்டுதே
முழுமதி பொழுதில்
கள்வனை தேடுதே,

என்னுள்ளம் கவர்ந்தவனே
பொன் மேனியில்
முத்தமழை பொழிவாயா?
காய்ந்த பூ போல்
வாடாமல் இருக்க
நீர் கொஞ்சம் ஊற்றுவாயா?

இதயத்தில் நுழைந்து
காதல் மருந்தினை தருவாயா?
மணக்கும் கூந்தலின்
மணம் நுகர்ந்து மகிழ்வாயா?,

மழை இல்லாத ஊரில்
வாழ்வது இயல்போ?
நீ இல்லாத வாழ்வில்
இன்பம் காண்பது எளிதோ?,

தீயென ஆனதே
இவளின் தேகம்
உள்ளுக்குள் ஏதேதோ மோகம்
தேகத்திலும் நிறைய தாகம்,

விரிந்த வானம்
எல்லை அற்றது
காதல் நோயும்
முடிவு அற்றது,

ஆற்றில் கரைந்திடும்
நுரையை போல்
ஆசைகள் கரைவது ஞாயமா?.

கள்வனே வந்தென்னை தீண்டுவாயா
தாமரையின் முகத்தில்
புன்னகை மலர்ந்திட செய்வாயா?
காமத்தின் தேடலுக்கு
தீர்வு ஒன்று எழுதுவாயா?,
-சங்கத்தமிழன்