...

3 views

காட்டுப் பூக்கள்
காட்டுப் பூக்கள்
கவலைப் படுவதில்லை
களவாடிச் செல்ல
கயவர்கள் கிளம்புவதில்லை
கட்டாயக் கொய்வு வாடிக்
கிடக்கும் வரை கனவிலும்
நடப்பதில்லை.....

முரண்பட்டுக் கொள்ள
ஒரு காரணம் கூட மீதியின்றி
மரித்துப் போய் வளமான
எண்ணங்களால் உயிர்ப்பான
வரம்பெற்ற வாழ்க்கை
நிமிடங்கள்.....

ஈகோப் புயலில் சிக்காமல்
துளிர்த்த ஒரு நட்புச் சாரல்
சிலிர்த்து சுவைக்க இறைவன்
பரிசளித்த கால வரங்களில்
இதுவும் ஒன்று.......

நீயும்...