...

11 views

என் பித்துப் பிடிக்க..
என் கவிதைகள்
உனக்குப்
பிடிக்கிறது✨🖋️

கவிதைக்கரு
உணர்ந்தால்
சர்வ நிச்சயம்
என் பித்தம்
உனக்குப் பிடிக்கும்
நேசமே
என் போல்😍💕

வினாவின்றி
விடையளித்துவிட்டேன்
விடுகதை புரிந்தால்
வித்தகன் நீ😉💕

சம்மதமா
உன் சமிக்ஞை
மொழி உணர்த்து🤩✨

காத்திருப்புகளுக்கு
களங்கம்
விளைவிக்காது
கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
சிறைப்பறவைகள் இரண்டும்
சிறகடிக்கட்டும்
பரந்த வானில்....🙈💖
© geetha S