...

5 views

தண்மையும் தனிமையும்....

இரவின் தூக்கத்தையும் காலையே கடன் வாங்கி கொண்டது......
காலை தாமதத் துயில் கலைந்து
படுக்கையை சரி செய்யும் வரை
மறைவதாய் இல்லை நடுக்க கலக்கம்.....

கைகளை நனைக்கும் குளிர் நீரும்
மெய் சிலிர்க்க செய்கிறது...
தாமதத்தில் காலைத் தேனீரும் சூடு மங்கி தண்ணீராகிறது......
தண்மை மறைய நடு வேளையாகிப் போனாலும், நடு நேரத்திலும்
சோம்பல் தாளாமல் துரத்துகிறது.

காலைக்குளியல் நேரம் தள்ளி
மதிய குளியலாகிறது....
நம் ஊரின் வெப்பச் சாயல் சிறிதும் இங்கில்லை....
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சையைப் போல்
நம் ஊரின் அருமை புரிகிறது....

இருள் கூடும் பொழுதுகளில் எல்லாம்
சேர்ந்தே குளிரும் கூடிப் போகிறது...
கதவடைத்துக் கொண்டு போர்வை முனைகளை தேடி போர்த்துக் கொள்கிறேன்....
கால் கணுக்களின் ஊடே குளிர் அவ்வப்போது அணுகிப் போகிறது....
தரை படும் பாதங்கள் இரண்டையும்
காலுறை போட்டு மூடிக் கொள்கிறேன்...

இழுத்து போர்த்திய போர்வையும் நானும் இரவை தனிமையாக்கி விட்டு
போர்வைக்குள் கதை பேச தொடங்கி விட்டோம்........




© kavi Seelan