...

2 views

புலம்பல்
பரபரப்பான காலை வேளை;
பட்டாம் பூச்சிகள் வட்டமிட,
பால் காரர் சத்தமிட,
காய்காரன் காய் விற்க,
மணி ஆறு;
ஊர்விழிக்கும் நேரம்;
பக்கத்து வீட்டில் பருப்பு வேகும் வாசம்,
பால் குக்கரில் விசில் சத்தம்,
சிறகடிக்கும் பறவைகள் சத்தம்,
சில்லென்ற காற்று,
உதயமானான் உதயசூரியன்☀️
பள்ளிச் சீருடையில் மாணவர்கள்,
கண்ணைக் கவரும் கல்லூரிப் பெண்கள்
கள்வர்களாய் அவர்களைத்
தொடரும் காளைகள்;
ஆங்காங்கே காதல் ஜோடிகளின் சந்திப்பு,
கண்களால் பேசும் சிலரின் தவிப்பு,
படபடப்பாய் பழம் விற்கும் பாட்டி,
பணிக்கு செல்வோரின் பரபரப்பு,
இருசக்கர வாகனங்களின் இரட்டிப்பு வேகம்,
பேருந்தில் அலைமோதும் கூட்டம்,
கலேபரமாய் செல்லும் கல்லூரி பேருந்து,
வாகன நெரிசலில் எரியாத
போக்குவரத்து சமிக்கை,
எங்கும் மக்கள் கூட்டம்;
புகைமண்டலமாய் பூமி!
"அதிகாலை தொடங்கி அர்த்த ராத்திரி
வரை இவர்களின் இந்த ஆரவாரத்தில்
"மூச்சு விட திணறிய இயற்கை
முடிவு செய்து விட்டது ! "
இவர்களுக்கு மூச்சுத்திணறல்
காட்டுவதென்று!
அதனால் இன்று,
ஆக்ஸிஜன் தேடி அலைகிறான்
அப்பாவி மனிதன் என்றான்
புவியின் நண்பன்;
பூமி அவனைப் பார்த்து
கேலியுடன் சொல்லியது;
"யார், இவனா அப்பாவி மனிதன்?
இன்னும் கொஞ்ச நாள் தான் !
உன்னோட ஊருக்கு
டிக்கெட் லாம் வாங்கிட்டான்!
சீக்கிரமே அங்க வருவான்
அப்போ தெரியும் உனக்கு
அவன் அப்பாவியா?
இல்ல அடப்பாவியா?
என்று "
திகைப்புடன் திரும்பியது செவ்வாய்!!!


என்றும் அன்புடன்

😍நான்😍



















© ❤நான் வாணி ❤