...

7 views

நாகரிக கலாச்சாரம்


ஆதம் கண்ட உலகம்
அண்ணாந்து பார்க்கின்றது
அறிவு என்று சொல்லியே
ஆக்கினை செய்யும் மனிதன்
அடுக்கடுக்காக அறிமுகப்படுத்தும்
அபத்தமான நாகரிகத்தை!

அழகான படைப்பொன்றை
அருமையாக படைத்த இறைவன்
அறிவாற்றல் கொடுத்தது
அன்புடன் வாழ்ந்து ஒற்றுமை பேணி
அயலவர் சிறக்கும் அகம்
அதில் தேர்ந்து சுற்றம் சுகம்பேணவே!

அருவருக்கும் அநாகரிகம்
அபரிதமாய் அரங்கேறும்
அரங்கம் எல்லாம் இன்றுலகின்
ஆடம்பரம் மிக்க நாகரிகமென்று
ஆதங்கம் எதுவுமின்றி பகரும்
அற்பனான சேதிகள் ஆயிரமன்றோ!

அக்குள் பொக்குள் அலங்காரம்
அழகிய இளமை அலங்கோலம்
அங்காடிகள் மேயும் மெய்யழகு
அரிக்கும் பூசு திரவியங்கள்
அத்தனையும்  நோய் சேர்க்கும்
அறியாமை பகறும் நாகரிகமன்றோ!

அன்றைய பெரியோர்கள்
அற்புதமாக சொன்ன சாஸ்திரங்கள்
அற்பமாக நினைக்கும் இன்றைய
அடங்காத இளசுகள் ஏமாந்து நிற்கும்
அவமானம் போதிக்கும் புது கலாச்சாரம்
அழித்தொழிக்க நீயென்ன நானென்ன
அரசனானாலும் அழித்தொழிக்க முடியாதொன்றே..

~ சிரியஸ் ~
© siriuspoetry