...

4 views

மறைக்க வழியின்றி..
தன் சந்தோஷத்தை
மறைக்க வழியின்றி
கடல் கணப்பொழுதும்
காத்திறாது காதலதை
காட்ட காட்டமாய்
கடற்கரையின் காலடி
நனைக்க பொங்கி
ஆர்பரித்து வருகிறது
நிமிடமும் நில்லாமல்..

நிலவது தன்பொழிவை
மறைக்க வழியின்றி
வெட்கத்துடன் தேய்ந்து
கூடி ஒளியாய்வந்து
ஒளியேற்றுகிறது நம்மில்
காரிருளிலும் நிலவில்லாத
நாளை புறக்கணித்து
வாழும்படி நிலவுதான்
நம்மை வசீகரித்து வாழ்கிறது..

அருவியதும் தன்னழகை
மறைக்க வழியின்றி
மண்ணை நோக்கி
ஆனந்த தாண்டவத்துடன்
தாவி வந்துவிழும்போது
நம்மையும் சேர்த்து
இழுக்கிறது தன்போக்கில்
மெட்டெடுத்து தன்பாணியில்
ஆடிபாடி நம்முடன்கலந்து..

பூவுமதுதன் நறுமணத்தை
மறைக்க வழியின்றி
மொட்டாய் தொடங்கி
பூவாய்மாறி மலர்ந்து
பூத்து குலுங்குகிறது
பூவையர் சிகையை
சேர்ந்தடைய குறும்
புன்னகையுடன் காலை
விடிந்ததும் மாலைவரை..

நானும்தான் நிற்கிறேன்
மறைக்க வழியின்றி..
மறக்க முடிவின்றி..
கடலில் அலையாய்..
நிலவின் நிழலாய்..
அருவியதன் ரசிகனாய்..
பூவதை ஏந்தியவண்ணம்..
மறைக்க வழியின்றி
மறுக்காமல் மனதை
திறப்பாயென..

© CG Kumaran