...

2 views

புதுவீடு...!
🍀கொட்டாங் குச்சியில் கொட்டி வைத்த
குருணைகளை கொத்த வரும் குருவிக்கு எப்படி சொல்ல?
நான் இடம் மாறுவதை?

🍀வாசலோரம் வந்து 'ம்மா' என அழைக்கும் அம் மாட்டுக்கு எப்படி சொல்ல?
நான் இடம் மாறுவதை?

🍀ஒருநேர உணவிற்கு ஓயாமல் சுற்றி வரும் அந்நாய் குட்டிகளுக்கு எப்படி சொல்ல?
நான் இடம் மாறுவதை?

🍀விதையாய் நட்டு இன்று விருட்சமாகி நிற்கும் முன் வாசல் வேப்பமரத்திற்கு
எப்படி சொல்ல?
நான் இடம் மாறுவதை?

🍀இதயத்தை இவ்விடமே இறக்கி வைத்து,
உடலை மட்டும் கொண்டு செல்கிறேன்,
புதிதாய் குடி பெயரும்
அப் புது வீட்டுக்கு!

© சிவ ப்ரகாஷ்

@sivapragash #சிவப்ரகாஷ்