...

2 views

சிரிப்பும் அழுகையும்
சிரிப்போ அழுகையோ இந்த உலகத்தில விலை மதிக்க முடியாத ஒரு விடயம் தான். எங்களோட இந்த சிரிப்புக்கு காரணமானவங்க ரொம்ப முக்கியமான நபராக இருக்க வேணும் என்ற அவசியம் இல்லை. ஒரு வழியால நடந்து போயிட்டு இருக்கும் போது நாம காண்கின்ற மனிதர்கள் ஏதோ நம்மள தெரிந்த போல நினைச்சு சிரிப்பாங்க, எங்களுக்கு அவங்கள யார்னு தெரியாமல் இருக்கும் ஆனாலும் பதிலுக்கு சிரிச்சிட்டு தான் கடந்து போவோம். சிரிப்பை எங்களுக்கு தருவதற்கு சந்தர்ப்பமோ,நபரோ அவசியமில்லை. நாங்க தனியாக ஒரு இடத்தில இருந்தால் கூட எங்களுக்கு சிரிப்பும் அழுகையும் வரும்.
சில சுவாரஸ்யமான நினைவுகளாய் இருக்கலாம், கடினமான நினைவுகளாய் இருக்கலாம் அவை ஆளுக்காள் வேறுபட்டுக் கொண்டிருக்கும். ஆனால் எதுவும் நீண்ட காலத்துக்கானதாய் இருக்காது. எண்ணங்களோட வலிமையே இது தான். எண்ணங்கள் ஒரு இடத்தில எப்பவும் இருக்கிறதில்லை.நேரம் காலம் பார்க்காமல் தாக்கும்.
நாங்க ஏன் அழுகிறோம்? எங்களோட வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் இந்த அழுகையோட தொடர்பானது தானே.
ஒரு குழந்தையை பிரசவிக்கும் போது அம்மாவும் அழுவாங்க குழந்தையும் அழும். நேர கணங்களில் சில அழுகை ஆனந்தமாய் உணரப்படுகிறது,
சில கவலையாய் உணரப்படுகிறது.
நம்மளோட இந்த கவலைகளோட தான் அரைவாசிக் காலம் மனிதர்கள் போராட வேண்டி இருக்கிறது. எங்களோட எண்ணங்களை நேரானதாய் அமைத்துக் கொண்டாலே கவலைகள் எல்லாம் நம் சிந்தனைகளில சிக்காமல் ஓடி விடும்.

© kavi Seelan