...

5 views

அவள் தாயவளே
அவள் அழகு தான்
ஆசை பிள்ளையாய்
இல்லத்தின் இளவரசியாய்
சிட்டுக்குருவி போல்
சிட்டாக பறந்தவள் !
மூத்த இளவரசி என்ற
கர்வம் அல்ல...
முதலில்
தாய் என்று
உணரவைத்தவள்
அல்லவா !
மூத்தவளா பிறந்ததால
அவள் பாசக்காரி...
இளவரசி ராணியாக
மாறினால் ...
இன்றும் சிட்டாக தான்
பறக்கிறாள்
சித்தாள் என்ற அடைமொழியோடு
தன் சிட்டுகளுக்காக !
அவள் தாயவளே !
© Nuradhaag