...

12 views

பருவப்பெண் யார்?

பாவாடையில் கரைப்பட்டு
தாவணி ஒன்று மாட்டி
ஆபரணங்கள் சூட்டி
அழகுசேர்த்து அவள்
பாவாடை கரையோடு
கனவுகளை கரைத்தவள்!
பருவப் பெண்ணோ ?


பள்ளி செல்லும் வயதில்
பருவப்பெண் என்று
உள்ளாடைகள் பலஅணிந்து
தோள்களில் காயங்கள் கொண்டவள் !
பருவப் பெண்ணோ ?

தலைகுனிந்து நடந்து
பலர் நகைத்தபோதும்
கோவமின்றி... நாணம்
கொள்பவள் !
பருவப் பெண்ணோ ?

கல்லூரிசாலை செல்லும்
வயதில்... சாலையோரம்
இடுப்பில் ஒன்று கையில் ஒன்று வைத்தவள்!
பருவப்பெண்ணோ ?

இருபத்திரண்டு வயதில்
பெதும்பை ஆவதுக்குள்
கருப்பை வலியால்
இறப்பவள்!
பருவப்பெண்ணோ ?

பருவம் வந்தால் போதுமா?
நெல்மணிகள் கனிந்து
தண்ணீர் வற்றிபோகி
நெற்கதிர் ஆகவேண்டாமா?

அவளின் கனவுகள் கனிந்து
தோல்விகள் வற்றிபோகி
கனவுகள் நினவாக்கி
நேருக்கெதிராக
கதிரவன் முன்நின்று
நானும் உம்மைப்போல்
எரிக்க தெரிந்தவள் என்று
சபதம்இட வேண்டாமா?

பெண்ணின்மீது
ஆதிக்கம் உள்ளவரை
பெண்ணவள் எண்ணக்கூடிய
வாய்ப்புகள் கொண்டவளே!

எண்ணிலடங்கா வாய்ப்புகள்
வரும்வரை அல்ல....
எண்ணியதை அடையும்வரை
எரிந்து கொண்டே இரு
கதிரவன் போல் ! பருவப்பெண்ணே !

#தமிழ்வரிகள்#கிறுக்கல் #பெண்ணவள்#தமிழ்பக்கம்
© Nuradhaag