...

1 views

வாழ்க்கை சாவதற்கே
ஏன் பிறந்தேன் என்று அறியாமலேயே
வாழ்க்கையின் அர்த்தம் தேட துவங்கி விட்டேன்.
எனக்கான அடையாளத்தை உருவாக்கும் முன்னரே,
ஆயிரம் அடையாளத்தை பெற்று விட்டேன்.
இளமையின் இனிமை தொடங்கிய கணமே,
கடமையின் கையில் என் காலங்கள் கரைந்து போனது.
ஊன் வருத்தி உழைத்து ஓய்ந்து போன போது,
அனுபவிக்கும் வயது கடந்து விட்டது.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற பொய்யான உலகில்,
நான் அறிந்த ஒரே ஒரு உண்மை இது தான்.
வாழ்க்கை சாவதற்கே...
© Ebinrider