...

8 views

காதலின் ராட்சசி ❣️
காற்றோடு
கவிப்படைக்கும்
நின்
மூச்சுகாற்றில்..!

என்முக்காலமும்
மறந்துதான்
போனேனோ..!

நின் முகத்தோடு
முகம் புதைத்து
உனில் எனை
இழந்துதான்
போனேனோ..!

இடையணைத்து
இதழ் பற்றி
இதயம் தின்றிடும்
முத்தமதில்
முழுதாய் கரைந்து போனேனோ..!

முழுமதியவளின்
மதிமயங்கி
விழிமயங்கும்
பொன்னொளியில்
ஏதோ ஓர்
புதுமைதான்..!

முனகல் சப்தமும்
இசையாய்
கொஞ்(சி)சம்
இம்சிக்க..!

இன்னுமின்னும்
அழுத்தமாய்
ஆராதழுவிடும்
ஆனந்த
யுத்தம்தான்..!

சுயம் மறந்து
போனாலும்
சுயநலம்தான்
இருவருக்கும்..!

விட்டுவிடாமல்
தொட்டணைக்கும்
இந்த காதலுக்கு பேர்தான் காமமோ
நானறியேனடி..!
என் காதல் ராட்சசி..!
© Manis✒️தனிமைகாதலன்