...

20 views

அவளும், அவள்...
அவளும், அவள்
நெற்றிப் பொட்டும்.,
வான் பார்த்திடாத,
வெண்ணிலவு தான்!

அவளும், அவள்
வாய் மச்சமும்.,
மழைத் தூறிடாத,
கார்முகில் தான்¡

அவளும், அவள்
காதுக் கம்மல்களும்.,
க(வி)தை பேசிடும்
காவியங்கள் தான்!

அவளும், அவள்
தோள் பையும்.,
இணை பிரியா,
தோழர்கள் தான்¡

அவளும், அவள்
கை வளையலும்.,
வண்ணமில்லா,
வானவில் தான்!

அவளும், அவள்
கை கடிகாரமும்.,
கரம் கோர்த்திடா,
காதலர்கள் தான்¡

அவளும், அவள்
கால் செருப்புகளும்.,
பூமி பார்த்திடா,
தடாகங்கள் தான்!