...

7 views

ஒரு காகிதத்தின் குமுறல்

எழுத்துக்களால் அலங்கரிக்கும் யான்,
வீதியிலே கிடக்கும் அனாதையாய்,
வெள்ளை மனதோடு,
கருப்பு குணத்தோடு,
காணும் யானோ இவ்வுலகிலே எதற்கு?

கவியின் வரிகளில்,
கட்டுரை பதிகளில்,
ஜொலிக்கும் பரவசத்தோடு,
வன்மை கொண்டு,
எம்மை எறிவது நியாயமோ?

மானிடரே...
உருவாக்கிய நீரே,
எம்மை அழிப்பதற்கா?
வருடும் என் மனது,
அடங்காத கண்ணீர் எனது...

சோகம்தான் என் உடைமை என்னவோ,
சித்திரைப்பதும் சிதைப்பதும்
எனக்குள்ளே,
பயனுள்ளவனாய் கரங்களில்
தவழும் யான்,
எம் கண்ணீர் தீர்த்தத்தின் கதறல் கேளாயோ...

அன்று உன் பேனா மைகளில்,
இன்று குப்பை தொட்டின் செவிகளில்,
என்றாவது எம்மை காண வருவாயா
இன்றும் இந்த தூர்நாற்றே வாசலிலே...

ஆக்கம்,
குகனேஸ்வரன் ஷண்முகம்
© All Rights Reserved