நேசிக்கும் நட்பூக்கள்
எனையே மறந்து பட்டாம்பூச்சியாய் சுதந்திரமாக பறந்த காலம் கல்லூரி காலமது..
ஒவ்வொரு இன்னல்களையும் கடக்கும் பொழுது உடன் பயின்ற நண்பர்களால் மகிழ்ந்த காலமது..
நட்பில் பாலினம் முக்கியமில்லை என்பதை கடைப்பிடித்து ஒன்றாகவே படிப்பிலும் எழுத்துக்களிலும் பகிர்ந்து, பாடத்தின் சந்தேகங்களை தெளிவு செய்துக்கொண்ட காலமது..
நேரடி இரண்டாமாண்டு மாணவியாய் கல்லூரியில்
சேர்ந்த சமயம்,
மூன்று வருட கல்லூரி படிப்பில் மறக்க முடியாதது ஒன்று
நான் படித்த புதுச்சேரி பொறியியல் கல்லூரி..
ஒன்றாகவே மதிய உணவை பகிர்ந்து உண்ணும் போதும், கல்லூரி சுற்றுலாவிற்கு கல்கத்தா சென்று சிறுச்சிறு சந்தோஷங்களையும் பகிரும் போதும்..
அடித்துப் பிடித்து ஓடியாடி விளையாடியப் போதும்,
பட்டம் பெற்று பிரியும் போதும் வராத வருத்தமும் வலியென்ற
உணர்வுகள்.
பிரிந்திருக்கும் போது தான் பிரிவுகளின் வலி புரிகிறது..
மிக நீண்ட வருடங்களாய்,
நேற்று எதிர்பாராத ஒரு சிறு சந்திப்பு..
திடீரென என் பிறந்தகத்திற்கு வருகை தந்தனர் அத்தனை குரங்கு கூட்டமும்..
கல்லூரியில் பார்த்த முகங்கள், சற்று மாறி இருந்தாலும் அதே குறும்பும் நகைச்சுவையும் கேலி கிண்டல்களும் அவர்களோடு இன்னும் மாறவில்லை..
மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு விடுபட்ட கல்லூரி நினைவுகளை நினைவுறுத்த மறந்தும் ஞாபகமாய் உரையாடி மதிய உணவு உண்டும், சிரித்து மீண்டும் அடித்து பிடித்து விளையாடிய தருணமும், மீண்டும் வலியோடு பிரிந்த கணமும்..
இனி அடுத்த சந்திப்பு எப்போதென்று கடவுள் நாள் குறித்தால் மட்டுமே கிட்டும்..
எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் கிடைக்காததொன்று *நட்பு*.
கிடைத்த பொருள் கைவிட்டு போனாலும், ஆசைப்பட்ட பொருளும் கிடைக்காமல் போனாலும், ஒன்று போனால் இன்னொன்று கிடைக்காமலா போய்விடும் என்ற ஆறுதல் கூறிய ஒரே கூட்டம் என் நட்புகளின் கூட்டம் மட்டுமே..
இன்று வரை எனக்கு கிடைத்த பொக்கிஷம் நண்பர்கள் கூட்டம் இது நான் வாங்கி வந்த வரமுமொன்று..
© ER.RANJITHA DHARA