இயற்கை
பரந்து விரிந்த வானம் முழுவதுமாய் பாலாடை போர்த்தி இருக்க உடற்குளிரை தனிக்க கிழக்கு வானில் உதயமாகிறான் ஆதவன்...
கனா காணும் காட்சிக் கோலத்தில் தன் இடம் நீங்கி இடம் அகன்று இறை தேடும் பட்சிகளின் கோலம் காணுகிறேன் அந்த சூரியோதயத்தில்..
பச்சை பசேலென தளிர் முளைத்த தாவர இனம் மலை குமிழ்களாய் கண் பார்க்கும் தூரம் காட்சி தர வண்டினங்கள் தேன் நுகர்கின்றன பூக்கள் நிறைந்த சோலைகளில்...
பொழுதுகளை...